வடக்கு மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் வவுனியா ஓமந்தையில் அமைக்கப்படும் என ஸ்ரீலங்கா அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் எங்கே அமைப்பது என்பது தொடர்பான சர்சை நீடித்து வந்த நிலையிலலேயே இதற்கு முடிவு எடுக்கப்பட்டுளள்ளதாக அமைச்சரை பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவத்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாரந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று புதன்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் குறித்து எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.