வடக்கின் மாபெரும் போருக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

central-st.johns-bigmatchஇலங்கையிலேயே பிரபல்யமான கிரிக்கெட் போட்டியான வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்டப் போட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளன. இது தொடர்பான ஊடகவியலாளர் கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன், சென்.ஜோன்ஸ் கல்லூரி அதிபர் என்.ஜே.ஞானப்பொன்ராஜா இவ்வருடத்திற்குரிய வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்டப் போட்டிகள் பற்றி கருத்துத் தெரிவிக்கும் போது,

“எதிர்வரும் 7ஆம் திகதி 107ஆவது வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்டப் போட்டியினை தாம் நடாத்தவுள்ளதாகவும், தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ள வடக்கின் மாபெரும் போட்டி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் யாவும் நடைபெறுவதாகவும், வீதிகளில் இடம்பெறும் போக்குவரத்து மற்றும் அசம்பாவித பிரச்சினைகளை கையாள்வதற்கு யாழ்ப்பாணம் பொலிஸார் கடமையில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவித்தனர்.

இரு அணிகளுக்குமான 50 பந்துபரிமாற்றங்கள் மட்டுப்படுத்தப்பட்ட துடுப்பாட்ட போட்டிகள் மார்ச் மாதம் 16 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது” என்று தெரிவித்தனர்.

Related Posts