நேற்றையதினம் (வியாழக்கிழமை) வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே கிளிநொச்சி மாவட்டத்துக்கு பயணம் செய்து கிளிநொச்சி பொதுச் சந்தையையும் கனகபுரத்தில் முன்னர் கட்டப்பட்ட பொருளாதார மத்திய நிலையத்தையும் பார்வையிட்டார்.
இதன்பின்பு அவர் மக்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும்போது, நான் ஒரு அமைச்சர் கிடையாது, நான் ஒரு ஆளுநர் அதாவது ஜனாதிபதியின் ஒரு தூதுவர்.
இந்த வருடம் வடக்கின் கல்வியமைச்சுக்காக ஒதுக்கிய நிதியில் 6000 மில்லியன் ரூபா மீண்டும் மத்திக்கு திரும்பியுள்ளது. குறித்த நிதியை தான் சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கதைத்து கிளிநொச்சி சந்தைக் கட்டடத் தொகுதி அமைப்பதற்கு பயன்படுத்த முடியுமா என்று பார்கின்றேன் முடியுமென்றால் கட்டாயம் நான் அதனை செய்துதருவேன்’ என தெரிவித்தார்.
ஆளுநரின் இந்தக் கருத்துக்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா பதில் சொல்வாரா?