லொறி விபத்தில் நால்வர் சாவு: 13 பேர் காயம்

மதவாச்சியில் இடம்பெற்ற லொறி விபத்தில் ரயில்வே திணைக்களத்தின் ஊழியர்கள் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்துக்கு ரயில் தண்டவாளங்களை ஏற்றிக்கொண்டு வந்தபோதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தண்டவாளங்களுக்குள் நசுங்குண்ட நிலையிலேயே அந்த நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சம்பவத்தில் காயமடைந்த 13 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.