லயன் எயார் விமானத்தில் இருந்து மீட்கப்பட்ட ஆடை, பொருட்கள் காட்சிக்கு

14 வருடங்களுக்கு முன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நம்பப்படும் லயன் எயார் – அன்டனோவ் 24 விமானத்தில் இருந்து மீட்கப்பட்ட ஆடைகள் மற்றும் உடைமைகள் யாழில் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

504428935flight

குறித்த விமானத்தில் பயணித்தவர்களை அடையாளம் காணும் முகமாக கடந்த மே மாதம் 3ம் திகதி முதல் 5ம் திகதி வரை பூநகரி இரணைதீவு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் போது மீட்கப்பட்ட 72 ஆடைகள் மற்றும் உடமைகளே காட்சி படுத்தப்பட்டுள்ளன.

யாழ். மாநகர சபை மைதானத்தில் இன்றும் (11) நாளையும் (12) இந்த ஆடைகள் மற்றும் உடமைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

கடந்த 1998ஆம் ஆண்டு செப்டெம்பர் 29ஆம் திகதி பலாலி விமான தளத்திலிருந்து இரத்மலானை விமான நிலையம் நோக்கி 48 பயணிகளுடனும், 6 விமான சிப்பந்திகளுடனும் பயணித்த விமானமே இரணைதீவு கடற்பரப்பில் வீழ்ந்தது.

விமானம் புறப்பட்டு 6 நிமிடங்களுக்குள்ளேயே தொடர்பு எல்லைக்குள் இருந்து விலகி காணாமல் போனது. அதன் பின்னர் குறித்த விமானம் விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது.