லண்டனுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி 20 லட்சம் ரூபா மோசடியில் ஈடுபட்ட அரியாலையைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் லண்டனுக்கு சுற்றுலா வீசா மற்றும் கல்வி விசாவில் அனுப்பி வைப்பதாகக் கூறி யாழில் உள்ள பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் இவரில் பல பண மோசடிச் சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த பெண் பலரை ஏமாற்றி விட்டு திருகோணமலையில் தலைமறைவாக இருந்து வந்துள்ளதாகவும் அண்மையிலேயே அரியாலைப் பகுதிக்கு வந்தபோது அவரைக் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக யாழ்.பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.