ராஜபக்சவை கூண்டிலேற்ற கோரி முன்னாள் இந்திய இராணுவ வீரர் தீக்குளிப்பு

fire2தமிழினப்படுகொலை செய்த ராஜபக்சவை ஐ.நா. மன்றம் தண்டிக்க கோரி முன்னாள் இந்திய இராணுவ வீரரும் நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டாளருமான தோழர் மணி தீக்குளித்தார்.

கடலூர் ஆட்சியர் அலுவலம் முன்பு நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவர் தீக்குளித்தமையால் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில், அங்கிருந்தோரினால் தீ அணைக்கப்பட்டாலும் மிகவும் ஆபத்தான நிலையிலேயே அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அவர் தீக்குளிப்பதற்கு முன்னதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இதற்கு எனது உயிரே முதல் வாக்காக இருக்கட்டும் என தீக்குளித்த நபர் கோஷமிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இன்று தமிழகத்தில் சேலம், சிதம்பரம் ஆகிய மாவட்டங்களில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும் மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor