ரஷ்யத் துருப்பினர் தவறுதலாக எல்லையைக் கடந்தனர்

யுக்ரைனில் கைது செய்யப்பட்டுள்ள 10 ரஷ்ய இராணுவத் துருப்புக்களும், தவறுதலாக எல்லையைக் கடந்து சென்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

russian_soldiers_ukraine

ரஷ்யாவுக்கும், யுக்ரைனுக்கும் இடையேயுள்ள எல்லை நிர்ணயம் செய்யப்படாதப் பகுதியை இந்த 10 பேரும் கடந்து சென்றுள்ளதாக ரஷ்யா கூறுகிறது.

அதே நேரம் திங்கள்கிழமையன்று பரசூட் படைப் பிரிவைச் சேர்ந்த ரஷ்ய துருப்புக்கள் எல்லையைக் கடந்து 20 கிலோ மீட்டர் தூரம் வந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டதாக யுக்ரைனின் தேசிய பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.

இதனிடையே யுக்ரைனின் அதிபர் ரஷ்ய அதிபரை சந்திக்க உள்ளார்.

Recommended For You

About the Author: Editor