ரயில் மோதியதில் இளம் பெண் பலி

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்ட இன்னசிற்றி ரயில் மோதியதில் இளம் பெண்ணொருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நேற்று இரவு 7.45 மணிக்கு இடம்பெற்றது.

கொடிகாமத்திற்கும் புத்தூர் சந்திக்கும் இடைப்பட்ட இராமாவில் என்ற இடத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

மிருசுவிலைச் சேர்ந்த செல்வரட்ணம் புனிதா (வயது-20) என்பவரே பலியானவராவார். சம்பவத்தையடுத்து ரயில் நிறுத்தப்பட்டு பெண்ணின் சடலத்தை ஏற்றி சாவகச்சேரி ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

சடலம் பொலிஸ் விசாரணை மற்றும பிரேத பரிசோதனைகளுக்காக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

குறித்த பெண் ரயிலுக்கு குறுக்கே பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகின்ற போதிலும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

Related Posts