ரயில் நிலைய கட்டடங்களில் தங்தியிருப்போர் ஜனவரிக்கு முன்னர் வெளிறே வேண்டும்: ரயில்வே திணைக்கள பிராந்திய பொறியியலாளர் தெரிவிப்பு.


ஓமந்தையில் இருந்து காங்கேசன்துறை வரையும் ரயில்வே பாதை அமைக்கும் ஆரம்ப கட்ட பணிகள் எதிர்வரும் ஜனவரியில் ஆரம்பிக்கப்பட உள்ளன.

இதற்கு முன் ஏற்பாடாக ரயில் பாதைகளை அமைத்து சீர்செய்யும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஓமந்தையில் இருந்து காங்கேசன்துறை வரைக்குமான ரயில் பாதையை நேரான பாதையாக அமைப்பதற்கு ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளன.ஏற்கனவே இருந்த பாதை வளைந்த பாதையாகும். இப்போது பாதைகள், மதகுகள் போன்றவற்றை தவிர்த்து ரயில் பாதை அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைவிட யாழ்-ரயில்வே நிலையம் மற்றும் காங்கேசன்துறை ரயில் நிலையம் என்பனவும் மிகவும் நவீன வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளன.இதே சமயம் யாழ்-ரயில் நிலைய கட்டடத்தில் தங்கிருப்போரும் ஜனவரிக்கு முன்னர் குறித்த இடத்திலிருந்து வெளிறே வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webadmin