யோகா, ஹிந்தி வகுப்புக்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்

yoga-mudra-asanaயாழ். இந்திய துணைத்தூதரகம் யோகா மற்றும் ஹிந்தி, இசைக் கருவி வகுப்புக்களுக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.

பயிற்சிநெறி அனைத்தும் இந்திய துணைத்தூதரகத்தில் 14, மருதடி வீதி நல்லூர் எனும் முகவரியில் எதிர்வரும் ஓகஸ்ட் அல்லது செப்டெம்பர் மாத காலத்தில் ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கைக்கான இந்திய துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.

மேற்படி பாடநெறியில் இணைந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் கீழே கேட்கப்பட்டுள்ள விபரங்களை cgi.jaffna@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 021-2220503 எனும் தொலைநகல் இலக்கத்திற்கு எதிர்வரும் ஓகஸ்ட் 9 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

விண்ணப்பதாரிகள், பெயர் மற்றும் வயது, இணையவுள்ள பாடநெறி, பாடநெறிக்கான பதிவுக் கட்டணம் இலங்கை ரூபா 250, தங்களுக்கான இசைக் கருவிகளை எடுத்துவர முடியுமா, மேலதிக தொடர்புகளுக்கான மின்னஞ்சல் முகவரி அல்லது கையடக்கத் தொலைபேசி இலக்கம் என்பவற்றினை குறிப்பிடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor