யுவதியை காணவில்லையென முறைப்பாடு

Missing-peopகொடிகாமம் மந்துவில் கிழக்குப் பகுதியினைச் சேர்ந்த 19 வயதுடைய புஸ்பராசா றெசிக்கா என்ற யுவதியை கடந்த செவ்வாய்க்கிழமை (15) தொடக்கம் காணவில்லையென யுவதியின் தாயாரினால் கொடிகாமம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (15) தனியார் கல்வி நிறுவனத்திற்குச் சென்ற மேற்படி யுவதி, இன்னமும் வீடு திரும்பவில்லையென தாயார் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் கூறினார்கள்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.