யுத்தத்தில் உயிரிழந்த படையினரை நினைவு கூரும் தினம் இன்று புதன்கிழமை பலாலி இராணுவத் தளத்தில் ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
பலாலி படைத்தளதில் அமைந்துள்ள படையினரின் நினைவுத் தூபிக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையும் இடம்பெற்றது. வடமாகாண ஆளுநர் பளிஹக்கார தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அரசாங்க அதிபர்கள், இந்தியத் துணைத்தூதர் நடராஜன், முன்னாள் இராணுவத் தளபதி பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா, அரச அதிகாரிகள் மற்றும் சமயத் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.