யுத்ததினால் கைவிடப்பட்ட படகுகளை மாவட்ட கடற் தொழிலாளர் சங்கத்திடம் வழங்குமாறு கோரிக்கை

see-board-vallamபருத்தித்துறை மற்றும் சுண்டிக்குளம் கடற்படை முகாம்களில் காணப்படுகின்ற படகுகளை யாழ். மாவட்ட கடற் தொழிலாளர் சங்கத்திடம் கையளிக்குமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை வட மாகாண கடற்படை கட்டளை அதிகாரியிடமே விடுக்கப்பட்டுள்ளது.

யுத்ததினால் கைவிடப்பட்ட மற்றும் உரிமை கோரப்படாத பல படகுகள் தற்போது பருத்தித்துறை மற்றும் சுண்டிக்குளம் கடற்படை முகாம்களில் காணப்படுகின்றன. இவற்றையே கடற் தொழிலாளர் சங்கத்திடம் கையளிக்குமாறு வட மாகாண கடற்படை கட்டளை அதிகாரியிடமே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு கடற் தொழிலை உரிய முறையில் மேற்கொள்ள முடியாத கஸ்டத்திற்க்கு உள்ளாகிய தொழிலாளர்கள் பலர் காணப்படுகின்றனர்.

இந்த படகளை கடற் படையினர் கையளிக்கும் சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க முடியும் என யாழ் மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் என்.கணேசமூர்த்தி மூலம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.