யாழ். வைத்தியசாலை பணிப்பாளருக்கும் வைத்திய சங்கத்திற்கும் இடையே முரண்பாடு

Jaffna Teaching Hospitalயாழ். போதனா வைத்தியசாலையின் அரச மருத்துவ சங்கத்திற்கும் வைத்தியசாலை பணிப்பாளருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டைத் தொடர்ந்து யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா சுகயீன விடுமுறையை சுகாதார அமைச்சிடம் கோரியுள்ளதாக தெரிவித்தார்.

இவ்விடயம் குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், ‘யாழ். போதனா வைத்தியசாலை அரச மருத்துவ சங்கத்தின் உள்ளக பயிற்சியை முடித்துக்கொண்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு கடமையாற்ற வந்த வைத்தியர்கள் 6 பேருக்கு தங்குமிட வசதி ஏற்பாடு செய்து கொடுப்பது தொடர்பாக தனக்கும் அரச மருத்துவ சங்கத்திற்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டதனை தொடர்ந்து இத்தீர்மானத்தினை எடுத்துள்ளதாக’ யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கூறினார்.

‘தங்குமிட வசதிகள் வைத்தியர்களுக்கு எற்றவாறு அமைத்துத் தருமாறு கோரிக்கை சுகாதார அமைச்சுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், அரச வைத்திய சங்கத்தினர் தாங்கள் நன்றாக நிர்வாகம் நடத்துவோம் என கூறியதற்கு இணங்க தான் சுகயீன விடுப்பினை சுகாதார அமைச்சிடம் கோரி நிர்வாகத்தை விட்டு சில நாட்கள் விலகியுள்ளதாகவும்’ அவர் கூறினார்.

நிர்வாகத்தில் தலையிட்டு நாங்கள் நிர்வாகம் நடத்துவோம் என்று கூறுவது ஏற்க முடியாத ஒன்று என்றும் நிர்வாகத்தினை அரச மருத்துவ சங்கத்தினர் தலையிடுவது தவறென்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Related Posts