யாழ். வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பு: தொண்டர்களின் போராட்டம் தொடர்கிறது

யாழ். போதனா வைத்தியசாலையில் தொண்டர் ஊழியர்கள் இன்று ஏழாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் யாழ் வைத்தியசாலை வளாகத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

jaffna-hospital

தங்களுடைய போராட்டத்திற்கு உரிய தீர்வை கிடைக்காவிடில் விபரீதமான முடிவுகளை எடுக்கவேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரித்ததையடுத்தே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநருடனான நேற்றைய சந்திப்பில், தொண்டர்களில் 80 பேருக்கு முதற்கட்டமாக நிரந்தர நியமனம் வழங்குவதாகவும் ஏனையவர்களுக்கு அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் ஒப்பந்த அடிப்படையில் பணியில் இணைத்துக் கொள்ளப்படுவதாகவும் உறுதிமொழியளிக்கப்பட்டது. இதனை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

வைத்தியசாலையில் நீண்டகாலமாக தொண்டர் ஊழியர்களாக பணியாற்றி அனைவருக்கும் இந்நியமனம் வழங்கப்படவேண்டுமெனவும் அவ்வாறு இல்லை என்றால் எங்கள் முடிவுகள் பாரதூரமாக அமையுமெனவும் தொண்டர்கள் எச்சரித்தனர்.

இதனை அடுத்து யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகத்தின் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே யாழ். போதனா வைத்தியசாலையில் பொஸிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை அரசியற்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் போராட்டத்திலுள்ள தொண்டர்களை குழப்பி வருவதாகவும் இந்நியமனம் வழங்கும் கோரிக்கையினை ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தி வருவதாக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நியமனம் வழங்கும் தீர்மானத்தினை தொண்டர்கள் ஏற்க மறுப்பு

தொண்டர் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதாக உறுதிமொழி

Related Posts