யாழ். வைத்தியசாலைக்கு 4 அம்புலன்ஸ் வண்டிகள் கையளிப்பு

hospital_newbuldingநவீன வசதிகள் கொண்ட நான்கு அம்புலனஸ் வண்டிகள் யாழ். போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 6ஆம் தகதி சுகாதர அமைச்சினால் இந்த அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்புலனஸ் வண்டிகள் இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சினால் வட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு 10 அம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் நான்கு யாழ் போதனா வைத்தியசாலைக்கும் ஏனையவை வடக்கில் உள்ள ஏனைய வைத்திசாலைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை யாழ். போதனாவைத்திய சாலையில் 12 அம்புலன்ஸ் வண்டிகள் சேவையில் ஈடுபட்டு வருவதாகவும் அடுத்து மாதம் மேலும் இரண்டு அம்புலனஸ் வண்டிகளை சுகாதர அமைச்சு வழங்கவுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பவனந்தராஜா தெரிவித்துள்ளார்.

புதியதாக வழங்கப்பட்டுள்ள இந்த நான்கு அம்புலன்ஸ் வண்டிகள் ஒவ்வவொன்றும் தலா 8 மில்லியன் ரூபா பெறுமதியான நவீன வசதிகள் கொண்டுள்ளதுடன் அவசர நோயாளிகளை இலகுவாக இடமாற்றக் கூடிய தன்மை கொண்டவை என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor