யாழ்.வேம்படி பாடசாலை மாணவிகள் இன்றும் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனர்

யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி அதிபர் இடமாற்றம் தொடர்பான விவகாரத்தில் உரிய நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தி பாடசாலை மாணவிகள் இன்றும் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.இதுவரை காலமும் அதிபராகவிருந்தவரை மருதனார் மடம் இராமநாதன் கல்லூரிக்கு இடமாற்றுவது தொடர்பாக எழுந்த சர்ச்சையினை அடுத்து நேற்றய தினம் மாணவிகள் பகிஸ்கரிப்பை மேற்கொண்டிருந்தனர்

இந்நிலையில் இன்றும் மாணவிகள் கல்லூரியின் மைதானத்தில் அமர்ந்து பகிஸ்கரிப்பை தொடர்ந்தனர்.இதற்கிடையில் யாழ்.மாநகர முதல்வர் மற்றும், ஈ.பி.டி.பி ஆதரவாளர் செல்வவடிவேல் ஆகியோர் மாணவிகளை சமாதானப்படுத்த முயன்றனர். எனினும் மாணவிகள் அதற்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டதுடன், தொடர்ந்தும் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து ஒலி பெருக்கியை பாவித்து அதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாணவிகளுக்கு உரையாற்றினார்.இதன்போது விடயம் தொடர்பாக அமைச்சரவையில் பேசுவேன், ஈ.பி.டி.பி சொன்னதையே செய்யும், என்றும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.இறுதியில் அமைச்சரின் உறுதிமொழிகளை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது

Recommended For You

About the Author: webadmin