யாழ் வீதி விபத்தில் ஆசிரியர் பலி

யாழ் காங்கேசன்துறை வீதியில் இன்றுபகல் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் ஆசிரியரான வீரசிங்கம் ஜெகதீஸ்வரன் (33) ஸ்தலத்திலேயே பலியானார்.இந்த சம்பவம் காங்கேசன்துறை வீதியில் மருதனார்மடம் சந்திக்கு அண்மையில் இடம் பெற்றது.முன்னே சென்ற வாகனத்தை மோட்டார் சையிக்கிளில் வந்தவர் முந்திச் சென்று கடக்க முற்பட்ட வேளையில் எதிரே வந்த மோட்டார் சைக்களுடன் மோதுண்டதில் இந்த விபத்து இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் இடம் பெற்ற இடத்திற்கு விரைந்த சுன்னாகம் பொலிசார் விhரனைகளை மேற்க்கொண்டனர்.
விபத்தில் பலியானவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலை பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக சுன்னாகம் பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.