யாழ்.வந்துள்ள அமெரிக்க குழு இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்தித்து பேசவுள்ளது!

tnaஇலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான குழுவினர் இன்று புதன்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்துப் பேசவுள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அமெரிக்க குழுவினர், அங்கு இனந்தெரியாத நபர்களால் அண்மையில் தாக்குதலுக்கு இலக்கான உதயன் பத்திரிகை அலுவலகத்தை சென்று பார்வையிட்டுள்ளனர்.

இவர்களின் யாழ். விஜயத்தின் போது சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முக்கியஸ்தர்களையும் சந்தித்து வடபுல சமகால நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

இந்தநிலையில் இன்றைய தினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து, சமகால யாழ். மக்களின் நிலைமைகள் மற்றும் நில அபகரிப்பு, படைகளின் அடாவடிகள் குறித்து தெளிவுபடுத்தவுள்ளனர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor