யாழ் முஸ்லீம்கள் அரசாங்க அதிபருக்கு எதிராக போராட்டம்

யாழ்ப்பாண முஸ்லீம்கள் மீள் குடியேறிய பரச்சேரி கிராமத்தில் இனி எதுவித கட்டுமானங்களையும் மேற்கொள்ள கூடாது எனவும் இதனால் நீர்வளம் பாதிக்கப்படுவதாக அங்கு சென்ற அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

muslim

நேற்றய தினம்(10) யாழ் முஸ்லீம்கள் பரவலாக குடியேறி வரும் அப்பகுதிக்கு அரச அதிபர்,யாழ் பிரதேச செயலாளர் தயானந்தன்,விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் சகிதம் சென்று மேற்கண்டவாறு கூறி சென்றுள்ளார்.

இந்த நேரத்தில் அம் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் எவரும் அம்மக்களுக்காக அங்கு குரல் எழுப்பவில்லை என்ற குற்றஞ்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட அம்மக்கள் யாழ் பிரதேச செயலகத்தின் முன்பாக நியாயம் கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

இதனையும் சில அரசியல் சார்பானவர்கள் தடுக்க முற்பட்டு இறுதியாக அம்மக்கள் போராட்டம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இப் பரச்சேரி மீள் குடியேற்ற கிராமம் தொடர்பாக கடந்த 3 வருடங்களாக பல்வேறு தரப்பினரும் முஸ்லீம் மக்களை மீள்குடியமர்த்துவதற்காக நடவடிக்கை மேற்கொண்டு வந்திருந்த நிலையில் அரச அதிபரின் கருத்தானது அம்மக்களை போராட்ட நிலைக்கு தள்ளி விட்டது.

Recommended For You

About the Author: Editor