யாழ் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 20 ஆம் திகதி யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றத்திற்கான விசேட நடமாடும் சேவை யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் இடம்பெறப் போவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் யாழ்ப்பாணம், சாவகச்சேரி மற்றும் வேலணை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளை உள்ளடக்கியதாக இவ் விசேட நடமாடும் சேவை இடம்பெறும் என யாழ் மாவட்ட பிரதேச செயலர் தெரிவித்தார்.
எனவே இதனை ஒரு நல்ல சந்தர்ப்பமாக யாழ் முஸ்லிம்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.