யாழ். மீனவர் பேரவை ஆர்ப்பாட்டத்துக்கு தடை! அடுத்து என்ன?

verasingamதேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அப்பேரவையின் விசேட கலந்துரையாடல் ஒன்று தற்போது வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்று வருகிறது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (15) காலை யாழ். பஸ் நிலையத்துக்கு முன் தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவை ஆர்ப்பாட்டத்தை நடத்த தீர்மானித்திருந்தது.

இவ் ஆர்ப்பாட்டத்தின் பின்னர் யாழ். மாவட்ட செயலகத்திற்கு பேரணியாக சென்று அங்கு மகஜர் ஒன்றையும் கையளிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என நீதிமன்றில் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டத்திற்கு தடை உத்தரவு பெறப்பட்டது.

இதன் காரணமாக அடுத்த நடவடிக்கை குறித்து தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவை இன்று காலை முதல் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது.

இக் கலந்துரையாடலில் தமிழ் அரசியற் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor