யாழ்.மீனவர்​கள் இருவர் படகுடன் தமிழகம் கோடியாக் கரையில் கரையொதுங்கி​யுள்ளனர்

fishing-boat_CIயாழ்.மீனவர்கள் தமிழகம் கோடியாக் கரையில் கரையொதுங்கிய நிலையில் மீட்பு யாழ்.குடாநாட்டிலிருந்து கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடும் போது காலநிலை சீற்றத்தின் காரணமாக காணாமல் போன இரு மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ். கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் ந.கணேசமூர்த்தி தெரிவித்தார்.

இருவாரங்களுக்கு முன்பாக தமிழகம் கோடியாக் கரையில் கரையொதுங்கிய வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இரு மீனவர்களும் அவர்களது படகும் ஓரிரு தினங்களில் அங்கிருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அங்கிருந்து கிடைத்த தகவலை மேற்கோள்காட்டி யாழ். கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் ந.கணேசமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

இவ்விரு மீனவர்களும் கடந்த இருவாரங்களுக்கு முன்னர் கடற்றொழிலுக்காக வல்வெட்டித்துறைப் பகுதியில் இருந்து புறப்பட்டுச் சென்றபோது காலநிலை சீர்கேட்டின் காரணமாக தமிழகம் கோடியாக்கரைக்கு படகுடன் காற்றினால் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதனை அடுத்து இவர்களை தமிழக கரையோரக் காவற்படையினர் பிடித்து தமிழகப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதன்பின்னர் அவர்கள் தமிழ் நாட்டில் இருந்து வல்வெட்டித்துறை கடற்றொழிலாளர் சங்கத்திற்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு தம்மை ஓரிரு தினங்களில் விடுவிப்பதாக இந்திய அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். எனவும் யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு காலநிலை சீர்கேட்டினால் இரு நாட்டு மீனவர்களும் அடிக்கடி கரையொதுங்குவதும் பின்னர் அவர்கள் அவர்களது நாட்டிற்கு அனுப்பிவைப்படுவதும் வழமையான ஒன்று என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor