யாழ் மாவட்ட வாக்காளர் பதிவு நடவடிக்கை ஒகஸ்ட்15ம் திகதி வரை நீடிப்பு

யாழ் மாவட்டத்தில் வாக்காளர் பதிவு நடவடிக்கை எதிர் வரும் ஒகஸ்ட் 15 ம்திகதி வரை கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. என உதவித் தேர்தல் ஆணையாளர் குகநாதன் தெரிவித்தார்.இந்த வாக்காளர் அட்டை மீள் பதிவுக்கு கிராம அலுவலர்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புகாரணத்திலேயே  கால நீடிப்பு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனவும் அவர்குறிப்பிட்டார்.

வாக்காளர் பதிவு நடவடிக்கையில் பொதுமக்களுக்கு ஏதாவது இடர்பாடுகள் ஏற்படும் பட்சத்தில் யாழ்.தேர்தல் அலுவலகத்துடன் தொடர்புகொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.

அத்துடன் வலிகாமம் வடக்கு பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்படாத மக்கள் அந்தந்த கிராம அலுவலர்களின் ஊடாக தங்கள் பதிவுகளை மேற்கொள்ளுமாறு உதவித் தேர்தல் ஆணையாளர் குகநாதன் மேலும் தெரிவித்தார்.