யாழ் மாவட்ட வாக்காளர் இடாப்பு திருத்தும் பணிகள் 29 ம் திகதியுடன் நிறைவு

Atchchuthan-electionயாழ் மாவட்டத்தில் 2013 ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தும் பணிகள் எதிர்வரும் 29 ம் திகதியுடன் நிறைவு பெறவுள்ளதாக யாழ் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சி.அச்சுதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர்மேலும் குறிப்பிடுகையில்

இது தொடர்பான சுற்று நிருபம் அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 2013 ம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் பதிவு செய்யும் நடவடிக்கைகள் நிறைவு செயது புதிய தேர்தல் இடாப்பு பொது மக்களின் பார்வைக்காக யாழ் மாவட்ட பிரதெச செயலகங்கள் மற்றும் கிராம அலுவலர் பிரிவுகளில் வைக்கப்பட்டுள்ளன.

எனினும் குறிப்பிடட வாக்காளர் இடாப்பில் பெயர்கள் பதிவு செய்யப்படாமல் விடப்பட்டவர்களின் பெயர்களை சேர்த்துக் கொள்ளவும் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்கி 2013 ம் அண்டுக்கான புதிய வாக்காளர் இடாப்பை நிறைவு செய்வதற்ககான இறுதி நடவடிக்கையாக தற்போது அனுப்பப்பட்ட சுற்று நிருபம் அமைந்துள்ளது.

இது வரை தமது பெயர்களை வாக்காளர் இடாப்புக்களில் பதிவு செயது கொள்ள முடியாதவாகள் மற்றும் விடுபட்டவர்கள் தமது பெயர்களை கிராம அலுவலர்களிடம் பதிவு செய்து கொள்ள முடியும் எனவும் யாழ் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.