Ad Widget

யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாகவும் ஆர்ப்பாட்டம்

ஐ.நா செயலாளர் நாயகம் பான்கிமூனின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார்.

ஐ.நா செயலாளர் நாயகம் நாளை யாழ்.மாவட்டத்திற்கு வருகைதர இருக்கும் நிலையில், யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணை மற்றும் காணிகள் விடுவிக்கப்படாமல் உள்ள மக்களுக்கு நீதி வேண்டி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும், நாளை வெள்ளிக்கழமை நண்பகல் 12 மணிக்கு யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்று கூட வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

அமைதியான முறையில் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம். இது ஐ.நா செயலாளருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் அல்ல. நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களுக்கு நீதி வழங்குங்கள் என அவரை எதிர்த்துக் கேட்பது போன்று இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக கூறினார்.

தொடர்புடைய செய்தி

ஐ.நா செயலாளர் நாயக்தின் கவனத்தையீர்க்கும் போராட்டம் நாளை யாழில்

Related Posts