யாழ். மாவட்டத்தில் வரட்சி நிவாரணம்

தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் குடாநாட்டின் பல பகுதிகள் கடும் வரட்சிக்குள்ளாகியுள்ளன. இப்பிரதேசங்களில் வாழும் மக்களது தேவைகளைக் கருதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் அமைச்சரவையில் விசேடமாக முன்வைக்கப்பட்ட திட்டத்திற்கு அமைவாக அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் நேற்று வரட்சி நிவாரண உதவித்திட்டம் முதற்கட்டமாக வழங்கப்பட்டது.

IMG_1439

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்கள் இந்த வரட்சி நிவாரணத்திற்காக உள்வாங்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக நேற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உருளைக்கிழங்குகள் வழங்கப்பட்டன.

சண்டிலிப்பாய் பிரதேசத்திற்கு உட்பட்ட பண்டத்தரிப்பு கூட்டுறவுச் சங்கத்திற்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 461 குடும்பங்களுக்கும் மானிப்பாய் கூட்டுறவுச் சங்கங்கத்திற்கு உட்பட்ட 412 குடும்பங்களுமாக மொத்தம் 873 குடும்பங்களுக்கு மானிப்பாய்ப் பிரதேசத்தில் இந்த உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இவ் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வை அமைச்சரின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.வி.குகேந்திரன் (ஜெகன்) உத்தியோகபூர்வமாக மாதகல் பகுதியில் ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் முரளிதரன் ஈ.பி.டி.பியின் மானிப்பாய் பிரதேச இணைப்பாளர் ஜீவா மற்றும் நிறஞ்சலா அப்பகுதி கிராம உத்தியோகத்தர்கள் பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.