யாழ் மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழையினால் 16 குடும்பங்கள் பாதிப்பு

கடந்த இரண்டு நாட்களாக யாழ் மாவட்டத்தில் காணப்பட்ட காற்றுடன் கூடிய மழையின் காரணமாக 16 குடும்பங்களைச் சேர்ந்த 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்தார்.

கடந்த 15 ஆம் திகதியிலிருந்து இன்றைய தினம் வரை யாழ்ப்பாண மாவட்டத்தில் காணப்பட்ட காற்றுடன் கூடிய மழையினாலே இப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அத்தோடு நல்லூர், கோப்பாய் தெல்லிப்பளை, பருத்தித்துறை, சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அனர்த்தத்தினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பாதிப்புகள் தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்தமுகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor