யாழ். மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வாமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
மாத்தல மாவட்டத்தின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக இருந்த சஞ்சீவ தர்மரத்தன யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.
யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு செங்கம்பளம் விரித்து பொலிஸ் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.