யாழ். மாநகர சபை முன்னாள் உறுப்பினருக்கு விளக்கமறியல்

judgement_court_pinaiவானின் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், வானை தீ மூட்ட முயற்சித்த குற்றச்சாட்டில் யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சிறிகரன் நிஷாந்தனை 14 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் உத்தரவிட்டார்.

யாழ். கோவில் வீதியில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு அத்துமீறி நுழைந்து வீட்டின் முன்பாக நின்ற வான் மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்டதாகவும் அதேவேளை வானை தீமூட்ட முயற்சித்ததாகவும் கூறி வீட்டின் உரிமையாளரினால் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதன் பிரகாரம் நேற்று காலை யாழ். பொலிஸாரினால் நிஷாந்தன் கைதுசெய்யப்பட்டார்.

பொலிஸ் விசாரணையினை தொடர்ந்து இவர் யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை, யாழ். நீதிவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் இவரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor