யாழ். மாநகர சபைக்கு பொது மக்களால் செலுத்தப்படாமல் 2.1 மில்லியன் ரூபா வருமானம் இன்னமும் நிலுவையாக உள்ளதாக யாழ். மாநகர சபை தெரிவித்துள்ளது.
யாழ். மாநகர நீர்வேலைப் பகுதியின் நீர்க்கட்டண அறவீட்டில் 2012ம் ஆண்டுக்கான வருமானத்தில் செலுத்தப்பட வேண்டிய வருமானமாக இந்த 2.1 மில்லியன் ரூபா வருமானம் மாநகர சபைக்கு இன்னமும் பொது மக்களால் செலுத்தப்படாமல் நிலுவையாக உள்ளது.
யாழ். மாநகர சபை நிதி நிலுவையைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நடமாடும் சேவைகள் நடாத்தப்படவுள்ளதாகவும்; அறிவிக்கப்பட்டுள்ளது.