யாழ். மாணவர் கைது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் உடன் தேவை – சர்வதேச மன்னிப்புச் சபை

கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு உள்நாட்டில் மாத்திரமன்றி வெளி நாடுகளிலிருந்தும் இலங்கை அரசுக்கு அழுத்தங்கள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில் மாணவர்களை விடுவிக்க அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புப்பிரிவுப் பொலிஸாரினால் கடந்த முதலாம் திகதி நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும், இவர்கள் துன்புறுத்தப்படக் கூடிய அபாயம் காணப்படுகிறது என்றும் மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

குறித்த மாணவர்களுக்கு எதிராக உத்தியோகபூர்வமாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளனவா என்பது இதுவரை தெரியவில்லை என்பதனையும் மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட நான்கு மாணவர்களில் ஒருவர் நேற்றுமுன்தினம் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

Related Posts