யாழ்.மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் நிறுத்தம்!

மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் சுற்றுச்சூழலை பாதிப்படையச் செய்யும் என விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் மேற்படி திட்டத்தை உடனடியாக நிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றய தினம் (செவ்வாய்கிழமை) நடைபெற்ற மேற்படி கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் தொடர்பான சாத்தியகூறு குறித்த ஆய்வு கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இரணைமடு- யாழ்ப்பாணம் குடிநீர் திட்டத்திற்கு கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்துவரும் நிலையில், இரணைமடு – யாழ்ப்பாணம் குடிநீர் திட்டம் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. அதில் ஒன்றாகவே மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் மேற்படி திட்டத்தினால் வடமாராட்சி கிழக்கு மீனவர்களுக்கு பாதிப்பு உண்டாகும் என தொடர்ச்சியாக கூறப்பட்டுவந்த நிலையில், அந்த திட்டத்தை நிறுத்தவேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சந்திப்பில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர், நரா நிறுவனத்தினர், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.