யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் ‘சென்றல் நைட்’ வருடாந்த ஒன்றுகூடலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.
மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களின் ஒன்றுகூடலானது நேற்றைய தினம் (07) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது.
ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் (யாழ்ப்பாணம் கிளை) தலைவர் தமிழழகன் தலைமையில் இவ்வருடாந்த ஒன்றுகூடல் நடைபெற்றது.
இதில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொணடு சிறப்பித்ததுடன், பிரதம விருந்தினருக்கான உரையையும் நிகழ்த்தினார்.
யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் யாழ். மத்திய கல்லூரிக்கும் இடையே வருடந்தோறும் நடாத்தப்பட்டுவரும் ‘வடக்கின் பெரும்போர்’ என வர்ணிக்கப்படுகின்ற மட்டுப்படுத்தப்படாத மாபெரும் துடுப்பாட்ட போட்டியின் இறுதிநாளில் வருடாந்த ஒன்றுகூடலை மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் முன்னெடுத்துடு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கல்லூரியில் கல்வித்துறையில் சாதித்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்ட அதேவேளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு பழைய மாணவர் சமூகத்தின் சார்பில் நினைவுப் பரிசிலும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதில் யாழ். மத்திய கல்லூரி அதிபர் எழில்வேந்தன் உள்ளிட்ட கல்லூரியின் பழைய மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.