யாழ். மக்களை சமாதானத்துடன் வைத்திருப்பதே எனது இலட்சியம் – சுகத் எக்கநாயக்க

police-akkanayakkaயாழ்ப்பாணத்தில் உள்ள மக்களை சந்தோசத்துடனும் சமாதானத்துடனும் வைத்திருப்பதே எனது இலட்சியம் என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகராக புதிதாக பொறுப்பேற்ற சுகத் எக்கநாயக்க தெரிவித்தார்.

கொழும்பு தலைமைப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய சுகத் எக்கநாயக்க யாழ்.பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகராக அண்மையில் பொறுப்பேற்றுள்ளார்.

அதன்படி பொறுப்பேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே யாழ்ப்பாண மக்களை சந்தோசமாகவும் சமாதானமாகவும் வைப்பதே எனது இலட்சியம் என்று தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்.பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றிய சமன் சிகேரா உதவிப்பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்று எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு சென்ற நிலையில் அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கே சுகத் எக்கநாயக்க பொலிஸ் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts