யாழ்.போதனா வைத்தியசாலை 450 தாதியர்களுடன் இயங்கிறது-பணிப்பாளர் தகவல்

போதிய தாதிய வளம் இன்றியே யாழ்.போதனா வைத்தியசாலை செயற்பட்டு வருவதாக பணிப்பாளர் டாக்டர் எஸ்.பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.இன்று யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த இலங்கை மற்றும் சர்வ மதக்குழுவிடமே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.யாழ்.போதனா வைத்தியசாலைக்கு 1500 தாதியர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் தற்போது 450 தாதியர்களே பணியாற்றுகின்றனர்.

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு தேவையான தாதிய வளம் விரைவில் நிரப்பட வேண்டும். அப்போது தான் யாழ்.மக்களுக்கு சிறந்த சேவையினை வைத்தியசாலையினால் வழங்க முடியும்.

வைத்தியசாலையின் உள்ளக்கழிவுகளை அகற்றுவதற்கான கழிவகற்றல் இயந்திரமும் வைத்தியசாலையில் இன்னமும் இல்லை. இதனையும் பெற்றுத்தர வேண்டும் என பணிப்பாளர் சர்வ மதக்குழுவிடம் கோரினார்.

மேலும் இக்குழுவினர் யாழ்.போதனா வைத்தியசாலையின் நோயாளர் விடுதிகளுக்கு நேரில் சென்றும் பார்வையிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webadmin