யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர் வாள் வெட்டுக்கு இலக்கு

யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நேற்று இரவு பணியை முடித்துக் கொண்டு வீடுதிரும்பிக் கொண்டிருந்த சமயம் கந்தர்மடம் பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் இவர் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.

நேற்று இரவு 9.45 மணியளவிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகின்றது. இச் சம்பவத்தில் காது,மூக்கு தொடர்பான சத்திரசிகிச்சை நிபுணர் திருமாறன் படுகாயமடைந்துள்ளார்.

சம்பவம் குறித்து யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் பொலிஸ் நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor