Ad Widget

யாழ். போதனா வைத்தியசாலை வைத்திய சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ். போதனா வைத்தியசாலையின் அரச வைத்தியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடாத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்காவில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்களுக்கும் அதனால் ஏற்படுகின்ற உயிரிழப்புக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், எழுந்து நிற்போம் எனும் தொனிப் பொருளில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடாத்தவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரச வைத்தியர் சங்கத்தினர் எதிர்வரும் 10 ஆம் திகதி காலை 10 மணி முதல் 11 மணி வரை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

கவனயீர்ப்பு போராட்டத்தின் போது, அனைவரும் தத்தமது வேலைத்தளங்களின் முன்னால் ஒன்றுகூடி வீதி விபத்து தொடர்பான விழிப்புனர்வை ஏற்படுத்தும் பதாதைகளை தாங்கியவாறு கவனயீர்ப்பில் ஈடுபடுமாறு வைத்தியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விபத்துக்கள் தொடர்பான விடயம் குறித்த மனுவொன்றை யாழ். மாவட்ட அரச அதிபர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மனுவின் பிரதியை பிரதமர் எதிர்கட்சி தலைவர் சட்ட ஒழுங்கு அமைச்சர் பொலிஸ் மாஅதிபர் வட மாகாண முதலமைச்சர் வட மாகாகண ஆளுநர் ஆகியோருக்கு அனுப்பவுள்ளதாகவும் வைத்தியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts