யாழ்.போதனா வைத்தியசாலை நரம்பியல் மருத்துவ வல்லுநருக்கு கோரோனா தொற்று

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நரம்பியல் மருத்துவ வல்லுநர் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற பிசிஆர் பரிசோதனையிலேயே அவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறப்பான சேவையாற்றி வரும் நரம்பியல் மருத்துவ வல்லுநருக்கே கோவிட் -19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர் கொழும்பு சென்று திரும்பிய நிலையில் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படுவதாக தாமே முன்வந்து பிசிஆர் பரிசோதனையை முன்னெடுத்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, கோவிட் -19 தடுப்பூசியின் முதலாவது டோஸை அவர் அண்மையில் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor