யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ள இருதய சத்திர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டிடத்தொகுதி ஒன்று அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.
இந்த கட்டிட நிர்மாணப் பணிகளுக்காக சுவிஸ் நாட்டில் உள்ள சுவிஸ் சிறிலங்கா பிஸனஸ் கொமினிற்ரி நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தக் கட்டிட நிர்மாணப்பணிகளுக்காக 510 மில்லியன் ரூபா நிதியுதவியை கோரியுள்ளதாகவும் தற்போது சுகாதார அமைச்சின் அனுமதிக்கான ஆவணங்கள் தயார்ப்படுத்தும் வேலைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் தற்போது போதிய வசதிகள் அற்ற நிலையில், இருதய சிகிச்சைப் பிரிவு செயற்பட்டு வருகின்றன.
வைத்தியசாலையின் சமையலறைக் கட்டடத் தொகுதியை அகற்றி அப்பகுதியில் நவீன முறையில் அந்த கட்டிடத்தொகுதியை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீபவானந்தாராஜா தெரிவித்துள்ளார்.