யாழ். போதனா வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தொகுதி திறந்துவைப்பு

hospital_newbuldingஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஜெய்க்கா நிறுவனத்தால் யாழ். போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடத்தொகுதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று புதன்கிழமை திறந்துவைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து புதிதாக திறந்துவைக்கப்பட்டுள்ள நவீன கட்டிடத்தொகுதியிலுள்ள 10 சத்திரசிகிச்சைக் கூடங்களையும் கண்காணிப்பு கட்டில்கள், புற்றுநோயை இனங்காணக் கூடிய கருவிகள் ஆகியவற்றையும் ஜனாதிபதி பார்வையிட்டுள்ளார்.

ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஜெய்க்கா நிறுவனத்தால் யாழ். போதனா வைத்தியசாலையில் 2555 மில்லியன் ரூபா செலவில் இப்புதிய கட்டிடத்தொகுதி நிர்மாணிக்கப்பட்டது.

யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் எஸ்.பவானந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, பாராம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர், இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜயகலா மகேஸ்வரன், மு.சந்திரகுமார், சில்வெஸ்திரி அலென்ரின், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor