யாழ். போதனா வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தொகுதி 15 ஆம் திகதி திறப்பு

hospital_newbuldingஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட யாழ். போதனா வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தொகுதி எதிர்வரும் 15 ஆம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஸ்ரீ பவனாந்தராஜா தெரிவித்தார்.

இந்த புதிய கட்டிடத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஜப்பான் அரசாங்கத்தின் 2.9 பில்லியன் ரூபா நிதியுதவியில் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய கட்டிடத்தொகுதியில் கதிர் இயக்கப் பிரிவு, ஈ.சி.ஜி, சத்திரசிகிச்சைக்கூடம் ஆகியன உள்ளடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor