யாழ். போதனா வைத்தியசாலையின் செயற்பாடுகள் இன்று முடங்கியது

சம்பள அதிகரிப்பு உட்பட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து யாழ். போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பமான இப்பணிப்பகிஷ்கரிப்பு நாளை காலை 8 மணிவரை இடம்பெறும் என அரச மருத்துவ சங்கத்தினர் யாழ். மாவட்டத்திற்கான தலைவர் வைத்தியர் நிமலன் தெரிவித்தார்

அவசர சிகிச்சைப்பிரிவு, குழந்தைகள் பிரிவு, கர்ப்பிணிகள் பிரிவு தவிர ஏனைய பிரிவுகள் அனைத்தும் இன்றைய தினம் இயங்காது எனவும் நாளை காலை 8.00 மணிக்கு வைத்திய சாலைச் செயற்பாடுகள் வழமை போல இயங்கும் எனவும் தெரிவித்தார்.

வைத்தியர்கள் சமூகமளிக்காமையால் வைத்திய சேவை பாதிக்கப்பட்டுள்ளதுடன், வெளிநோயாளர் பிரிவில் நோயாளிகள் சிகிச்சை பெறமுடியாத நிலையில் திரும்பிச் சென்றதைக் காணக்கூடியதாக இருந்தது.