யாழ்.மின்சார நிலைய வீதியில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான கட்டடம் இடிக்கப்பட்டு புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள நிலையில் குறித்த வீதியால் செல்லும் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
கடந்த காலங்களில் வெளிநோயாளர் பிரிவாக இருந்த குறித்த கட்டடம் தற்போது விபத்து பிரவாக புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள நிலையில் இந்தக் கட்டடம் யாழ்.போதனா வைத்தியசாலை அனுமதியுடன் இடிக்கப்பட்டு வருகிறதாக தெரிய வருகிறது.
இப் புனரமைப்பு பணிகளால் வெளிவரும் கற்கள் தூசுகள் மூலம் அவ் வீதியினூடாக பயணம் செய்யும் மக்கள் மற்றும் அப் பகுதியை சார்ந்த இடங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் என பலரும் பாதிக்கப்படுகின்றனர்.
அத்துடன் மின்சார வயர்களும் அறுந்து விழும் நிலை உருவாக நேரிடலாம். யாழ்.போதனா வைத்திய சாலையின் இப் பொறுப்பற்ற செயலால் மக்கள் பெரும் விசனமடைந்துள்ளதுடன் குறித்த விடயம் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றனர்.