யாழ். புகையிரத நிலையத்தின் தரிப்பிட மேடை அமைக்கப்படுகின்றது

யாழ். புகையிரத நிலையத்தின் புகையிரதத் தரிப்பிட மேடை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

train-jaffna

யாழ்.தேவி புகையிரதம் தற்போது கிளிநொச்சி வரையிலும் சேவையில் ஈடுபட்டு வருவதுடன், அடுத்த வருடம் நடுப்பகுதியில் யாழ்ப்பாணம் வரையில் புகையிரத சேவை நடைபெறுமென ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

அதற்கமைய தற்போது யாழ்ப்பாணத்திற்கான புகையிரத பாதை அமைக்கும் பணிகள் மிகத்துரித கதியில் நடைபெற்று வருகின்றன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பெருமளவான இடங்களில் புகையிரத பாதைகள் போடப்பட்டு வருவதுடன், தரிப்பிட மேடைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.