இலங்கை மின்சார சபையின் வட பிராந்தியத்துக்கான தலைமை அலுவலகக் கட்டடப் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
யாழ். பழைய பூங்கா வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்த தலைமை அலுவலகக் கட்டடம் 3 மாடிகளைக் கொண்டதாக சுமார் 150 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு வருகிறது.
யாழ்.நகரப் பகுதியில் அமைந்திருக்கும் மின்சார நிலையப் பகுதியை யாழ். போதனா வைத்தியசாலைக்கு வழங்கியமைக்கு மாற்றீடாக பழைய பூங்கா வளாகத்தில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.