யாழ்.பல்கலை மாணவி மர்மமான முறையில் மரணம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவர் வியாழக்கிழமை மர்மமானமுறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வீட்டில் படித்துக் கொண்டிருந்த மாணவியே மர்மனான முறையில் மரணமடைந்துள்ளார்.இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்…
சுன்னாகம் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய நடராசா கியானி என்ற பல்கலைக்கழக மாணவி நேற்றயதினம் தனது இல்லத்தில் படித்துக்கொண்டிருந்திருந்தார்.

அந்த நேரம் அவரது பெற்றோர் வெளியில் சென்றுவிட்டு வீடுதிரும்பி வருகையில் மாணவி படித்துக்கொண்டிருந்த மேசையிலேயே மரணித்துள்ளார்.