யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியச் செயலாளர் நள்ளிரவில் கைது

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளரான ப.தர்ஷானந் (வயது24) நேற்று நள்ளிரவு கோப்பாய் பொலிஸாரால் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார் என்று அவரது தாயார் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தாவது:
“நள்ளிரவு ஒரு மணியளவில் பொலிஸ் சீருடையில் வந்த நால்வர் வீட்டின் கதவைத் தட்டினர். பின்னர் தர்ஷானந்தின் அடையாள அட்டையை வாங்கிப் பரிசீலித்துவிட்டு “வாக்குமூலம் ஒன்றைப் பெறுவதற்காக கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு தர்ஷானந்தை அழைத்துச் செல்லப் போகின்றோம்’ என்று கூறினார்.

ஆனாலும் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று நான் கதறினேன். ஆனால் அதனையும் மீறி அந்த நால்வரும் தர்ஷானந்தை அழைத்துச் சென்று வெளியில் நின்றிருந்த வாகனத்தில் ஏறிச் சென்றுவிட்டனர்.

அவரை கைது செய்ததற்கான எந்தவிதமான ஆவணங்களையும் எமக்குப் பொலிஸார் வழங்கவில்லை.” என்று கண்ணீருடன் தர்ஷானந்தின் தாயார் தெரிவித்தார்.

எனினும் இதுகுறித்து உறுதிப்படுத்த கோப்பாய் பொலிஸ் நிலையத்தோடு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது, “தமிழ், ஆங்கிலம் தெரிந்தவர்கள் பொலிஸ் நிலையத்தில் இல்லை. நாளை காலை நேரில் வாருங்கள்” என்ற பதிலே அரைகுறைத் தமிழில் கிடைத்தது.

Recommended For You

About the Author: webadmin