யாழ். பல்கலை மாணவர் ஒன்றிய செயலர் பொலிஸில் முறைப்பாடு

jaffna-universityயாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் பரமலிங்கம் தா்ஷானந்தின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட கல் வீச்சு தாக்குதல் சம்பவம் தொடர்பாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். பிறவுண் வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டின் மீது வெள்ளி இரவு 7.30 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் சிலர் இக் கல்வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறினார்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ். பொலிஸார் மேலும் கூறினர்.

தொடர்புடைய செய்தி

யாழ். பல்கலை மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்ஷானந் வீட்டின் மீது கல்வீச்சு